'2020 அதிபர் தேர்தல்' ட்ரம்ப்புக்கு எதிராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை அதிபர் ஜோபிடன் போட்டியிடுகிறார். இந்நிலையில், ஜோன் பிடன், அவரது மகன் ஹண்டர் பிடன் ஆகியோரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் உக்ரைனிடம் அதிபர் ட்ரம்ப் உதவிக்கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபை ட்ரம்ப் மீது கடந்த செப்டம்பர் மாதம் பதவி நீக்க விசாரணை தொடந்து.
கடந்த மூன்று மாதங்களாக நடைபெற இந்த விசாரணையின் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், அதன் அறிக்கையை விசாரணைக் குழு வெளியிட்டுள்ளது.
300 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், அதிபர் ட்ரம்ப் தன்னுடைய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி உக்ரைனுக்கு அழுத்தம் கொடுத்தற்கான ஆதாரங்கள் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஸெலன்ஸ்கியுடனான சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப், ஜோ பிடன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டுமெனவும், அப்படி இல்லையென்றால் அந்நாட்டுக்கு அளித்துவரும் 391 மில்லியன் டாலர் ராணுவ உதவி நிறுத்தப்படும் என அழுத்தம் கொடுத்துள்ளார்.
இதுதவிர, பதவிநீக்க விசாரணையை தடுக்க அதிபர் ட்ரம்ப் முயற்சி செய்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ட்ரம்ப்புக்கு காலம் சொல்லப்போகும் பதிலென்ன!