காஸாவில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் நடத்திய தொடர் தாக்குதலில் பலர் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 36 மணிநேரத்திற்கு மேலாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 600 ராக்கெட் மூலம் ஹமாஸ் படையினருக்கு சொந்தமான 250 இடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் மீண்டும் அசாதாரண சூழல்! முடிவுக்கு கொண்டுவர ட்ரம்ப் வலியுறுத்தல்
வாஷிங்டன்: காஸாவில் நடைபெறும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பயங்கரவாத அமைப்புகளால் இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்களை மீண்டும்சந்தித்துள்ளது. இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு நாங்கள் (அமெரிக்கா) 100 விழுக்காடு ஆதரவை தெரிவிக்கிறோம். இஸ்ரேலுக்கு எதிராக நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களால் காஸாவிற்கு துயரம் ஏற்படுவதை தவிர வேறு ஒன்றும் நடக்கபோவதில்லை. இந்த வன்முறையை நிறுத்திக் கொண்டு, அமைதிக்கான வழியைகாஸா மேற்கொள்ள வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.