உலக அளவில் பெரும் பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்க் தற்போது நான்காவது இடத்தில் உள்ளார். உலக அளவில் அதிகளவில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராகவும் எலான் மஸ்க் உள்ளார்.
இதுதவிர, ராக்கெட்டுகளை தயாரிக்கும் உலகின் முதல் தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தையும் இவர் உருவாக்கினார். இந்த இரு நிறுவனங்களை தவிர மூளை-கணினி இணைப்பு குறித்து ஆய்வை மேற்கொண்டுவரும் நிறுவனமான நியூரலிங்கில் என்ற நிறுவனத்தையும், எலான் மஸ்க் 2016ஆம் ஆண்டு தோற்றுவித்தார்.
இந்நிறுவனத்தின் ஆய்வுகள் இதுவரை எலிகள் மற்றும் குரங்குகள் மீது நடத்தப்பட்டன. இந்தச் சூழலில் மனிதர்கள் மீதான சோதனை நியூரலிங்கில் நிறுவனத்தால் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எலான் மஸ்க் இந்த வாரம் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை மனிதர்களால் கேட்க முடியாத ஒலிகளையும், தற்போது உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் உதவியுடன் கேட்க முடியும் என்று எலான் மாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நெட்டிசன் ஒருவர், "நாங்கள் நியூரலிங்கை செயல்படுத்தினால் - மெமரி கார்டுகளில் இருக்கும் இசையை நேரடியாக கேட்க முடியுமா?" என்று எலான் மஸ்க்கிடம் கேட்டிருந்தார். அதற்கு அவர் "முடியும்" என்று பதிலளித்திருந்தார்.