டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் எலன் மஸ்க்குக்கு கடந்த மே 5ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு X AE A-12 என பெயர் சூட்டியுள்ளதாக மஸ்க் தனது ட்வீட் செய்திருந்தார். ஆனால், கலிஃபோர்னிய சட்டத்தின்படி பிறப்புச் சான்றிதழ்களில் எழுதப்படும் பெயர்களின் எழுத்துக்கள் அனைத்துமே 26 ஆங்கில எழுத்துக்களை மட்டுமே கொண்டதாக இருக்க வேண்டும் என்பதால், பிறப்புச் சான்றிதழுக்காக தற்போது மகனின் பெயரை மாற்றி மஸ்க் மாற்றியுள்ளார்.
மகனின் பெயரை 'X AE A-XII' என மாற்றிய எலன் மஸ்க்! - Musk
வாஷிங்டன்: எலன் மஸ்க் தனது மகனின் பெயரை X AE A-XII Musk என பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்துள்ளார்.
elon
அதன்படி பிறப்புச் சான்றிதழில் X AE A-XII Musk எனப் பெயர் பதியப்பட்டுள்ளது. ஏற்கனவே, எலன் மஸ்க்குக்கும், அவரின் முன்னாள் மனைவி ஜஸ்டின் வில்சனுக்கும் ஆறு குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது.