டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலோன் மஸ்க் - க்ரிம்ஸ் தம்பதிக்கு மே 5ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் புகைப்படத்தை எலோன் மஸ்க், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, பல தரப்பினர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வந்தனர். ஆனால், ஒருவர் மட்டும் குழந்தையின் பெயர் தெரியவேண்டும் என்று கேட்டிருந்தார். அதற்கு எலோன் மஸ்க், X AE A-12 எனப் பதிலளித்தார்.
இதைத் தொடர்ந்து, எலோன் மஸ்க் குழந்தையின் பெயர் பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இப்படியும் பெயர் வைப்பார்கள் என வியந்தவர்கள் தொடர்ச்சியாக பெயருக்கான அர்த்தங்கள் குறித்து கேட்டு வந்தனர். இதற்கு எலோன் மஸ்க் காதலி க்ரிம்ஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்தார். ஆனால், அதைப்படித்து தான் பெரும்பாலான மக்கள் குழம்பிப் போனார்கள்.