தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அம்மாவாகும் கிரிம்ஸ் - மகிழ்ச்சியில் எலான் மஸ்க் - எலான் மசுக்கின் காதலி கர்ப்பம்

பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க்கின் காதலி கிரிம்ஸ் தான் கர்ப்பம் தரித்திருப்பதாகத் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கனடா பாடகி கிரிம்ஸின் இன்ஸ்ட்ராகிராம் பதிவு
கனடா பாடகி கிரிம்ஸின் இன்ஸ்ட்ராகிராம் பதிவு

By

Published : Feb 2, 2020, 11:29 PM IST

Updated : Feb 3, 2020, 9:28 AM IST

பிரபல தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான எலான் மஸ்க்கின் காதலி கிரிம்ஸ் (31). கனடா பாடகியான இவர், இந்தாண்டின் தொடக்கத்திலிருந்தே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்தான் கர்ப்பம் தரித்ததைப் போல புகைப்படங்களைத் தொடர்ந்து பதிவிட்டுவந்தார்.

இந்தப் பதிவுகள் அவருடைய ரசிகர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில்தான் கர்ப்பமடைந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என்று குறிப்பிட்டு தான் கர்ப்பம் தரித்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

கனடா பாடகி கிரிம்ஸின் இன்ஸ்டாகிராம் பதிவு

மேலும் அந்தப் பதிவில், "கர்ப்பம் தரித்த சில நாள்களில் தனக்கு 'சிக்கல்கள்' இருந்தது. தற்போது மூன்று மாதங்கள் ஆகிய நிலையில் எல்லா இடங்களிலும் எனக்கு வலிக்கத் தொடங்கியுள்ளது. நான் எனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தவில்லை.

கனடா பாடகி கிரிம்ஸ்

தற்போது 25 வாரங்கள் ஆகியுள்ள நிலையில் எனக்கு எந்தக் குழந்தை பிறக்கபோகிறது என்பது தெரியவில்லை. ஆனால் உடல் ரீதியாக இன்னும் கடினமாக வேலைசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். நிறைய சிந்தனைகளைப் பதிவிடுவது எளியது. ஆனால் உடல்ரீதியாக எதுவும் கடினமானது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க:

பட்ஜெட் 2020-21: ரியல் எஸ்டேட் வரவேற்புக்குரியதா, ஏமாற்றக்கூடியதா?

Last Updated : Feb 3, 2020, 9:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details