அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அவருடன் கமலா ஹாரிஸ் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதிபர் தேர்தலின்போது மக்கள் நேரடியாக வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதில்லை. அதற்குப் பதிலாக எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களை வாக்காளர்கள் குழு என்று சொல்லலாம். இந்தக் குழுவினரே அதிபரைத் தேர்ந்தெடுப்பார்கள்.
அதிபர், துணை அதிபர்களை இந்த எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் நடைமுறை நேற்று (டிச. 14) நடைபெற்றது. 538 எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களில் பைடன்-ஹாரிஸ் தரப்புக்கு 306 வாக்குகள் கிடைத்தன. அதேநேரம் அதிபர் ட்ரம்பிற்கு வெறும் 232 வாக்குகளே கிடைத்தன.