இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரபல பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல், 'ராக்' டுவைன் ஜான்சனின் சுயவிவரத்தில் அவரை வேலையில்லா நபராக குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் இதுகுறித்து ராக் கூறுகையில், "நான் இப்போது ஒரு விஐபி, உண்மையை சொல்லவேண்டும் என்றால் இப்படி இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. எனது குடும்பத்துடன் சிறிது நேரத்தை செலவிட முடிந்துள்ளது" என்று ஜாலியாக கூறியுள்ளார்.
டிஸ்னியின் 'ஜங்கில் குரூஸ்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பை இப்போதுதான் டுவைன் ஜான்சன் முடித்துள்ளார். நெட்ஃபிளிக்ஸின் 'ரெட் நோட்டீஸ்' என்ற படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கவுள்ளது. இடைப்பட்ட ஒரு மாத காலமே அவர் வேலையின்றி இருக்கிறார் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.