தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 28, 2020, 12:33 PM IST

ETV Bharat / international

இன்னும் சில வாரங்களில் மோசமான பாதிப்பை அமெரிக்கா சந்திக்கும் : பெருந்தொற்று நிபுணர் கவலை

கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட விழாக்கால தாக்கம் காரணமாக இன்னும் சில வாரங்களில் மோசமான பாதிப்பை அமெரிக்கா சந்திக்கும் என அந்நாட்டின் பெருந்தொற்று நிபுணர் ஆந்தோணி ஃபாச்சி கவலை தெரிவித்துள்ளார்.

Anthony Fauci
Anthony Fauci

அமெரிக்காவின் கோவிட்-19 பாதிப்பு குறித்து அந்நாட்டின் பெருந்தொற்று நிபுணர் ஆந்தோணி ஃபாச்சி தற்போது கவலை தெரிவித்துள்ளார். அந்நாட்டில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட விழாக்கால கொண்டாட்ட மனநிலையில் மக்கள் இருப்பதால், நோய் பரவல் மேலும் தீவிரமடையும் என, முன்னதாக அதிபராகப் பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன் கவலை தெரிவித்திருந்தார்.

அதை பிரதிபலிக்கும் விதமாக தற்போது ஆந்தோணி ஃபாச்சியும் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், "அடுத்த சில வாரங்களில் மோசமான விளைவுகள் ஏற்படுவதற்கான அனைத்து சூழல்களும் கானப்படுகிறது. இது சிக்கலான தருணமாகும். அதேவேளை மக்கள் அனைவரும் வாய்ப்புகள் கிடைத்தால் தாமதிக்காமல் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்வர வேண்டும். தடுப்பூசியின் பாதுகாப்புத்தன்மை குறித்து முழு நம்பிக்கை கொண்டுள்ளேன்" என்றார்.

அமெரிக்காவில் இதுவரை ஒரு கோடியே 95 லட்சத்து 73 ஆயிர்தது 847 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டின் மொத்த உயிரிழப்பு மூன்று லட்சத்து 41 ஆயிரத்து 138ஆக உள்ளது.

இதையும் படிங்க:அனைவருக்கு கரோனா தடுப்பூசி - ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்

ABOUT THE AUTHOR

...view details