கரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் பல உலக நாடுகள் திணறி வருகின்றன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துவருகின்றனர். அந்த வகையில், பிரேசில் நாட்டின் மிகவும் முக்கியமான மனாஸ் பகுதியில் கரோனா தாக்கம் அதிகளவில் உள்ளது. இதுவரை அப்பகுதியில் 2 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி 172 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனாவால் உயிரிழந்தவர்களை புதைப்பதில் இடப்பற்றாக்குறையும், மக்களுக்கு அச்சமும் ஏற்பட வாய்ப்புள்ளதை தொடர்ந்து, பொது இடத்தில் கல்லறை அமைத்து சவப்பெட்டிகளை புதைப்பதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது.