தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ட்விட்டர் நிறுவனத்திற்கு ட்விட்டர் மூலமே மிரட்டல்....கோபத்தின் உச்சத்தில் டிரம்ப்!

ட்விட்டர் நிறுவனம் எல்லைமீறி செல்கிறது என்றும், தனது ஆட்சி மீண்டும் அமைந்தால் சட்டப்பிரிவு 230ஐ அந்நிறுவனத்துக்கு பரிசாக அளிக்கவுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டும் தொனியில் ட்வீட் செய்துள்ளார்.

greta thunberg
greta thunberg

By

Published : Nov 6, 2020, 5:58 PM IST

Updated : Nov 6, 2020, 9:22 PM IST

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெற்றி வாகை சூட 270 இடங்களை ஒருவர் கைப்பற்ற வேண்டும். தற்போதுவரை ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன்தான் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். வாக்கு எண்ணிக்கையில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் தேர்தல் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டு வந்தக் கருத்துகளை ட்விட்டர் நிறுவனம் அதிரடியாக நீக்கி வருகிறது. டிரம்ப் பதிவிட்ட 10க்கும் மேற்பட்ட ட்வீட்கள் இதுவரை நீக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இதனால் கடும் கோபமடைந்துள்ள டொனால்ட் டிரம்ப், ”ட்விட்டர் நிறுவனம் எல்லைமீறி செல்கிறது. தன்னுடைய அரசு மீண்டும் அமைந்தால் அரசு அவர்களுக்கு சட்டப்பிரிவு 230ஐ பரிசாக வழங்கும்” என ட்விட்டர் வாயிலாகவே ட்விட்டர் நிறுவனத்தை மிரட்டும் தொனியில் பதிவிட்டுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் ட்விட்டர் பதிவு

சட்டப்பிரிவு 230 என்றால் என்ன?

சட்டப்பிரிவு 230(Section 230) என்பது டெக் நிறுவனங்களுக்கு கடிவாளம் போடக்கூடிய ஒரு சட்டமாகும். அச்சட்டத்தின்படி, தனிநபர் பதிவிடும் அனைத்துப் பதிவுகளுக்கும் அந்த நபர் மட்டுமே பொறுப்பல்ல. அதனை வெளியிட்ட சமூகவலைதளங்களுக்கும் அந்தப் பொறுப்பு இருக்கிறது. மோசமான பதிவுகளை யாரேனும் பதிவிட்டால், அதனை வெளியிட்ட சமூகவலைதளம் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும்.

இதையும் படிங்க:ட்ரம்பின் வார்த்தைகளைக் கொண்டே அவரை பழிதீர்த்த 'கிரேட்'டா!

Last Updated : Nov 6, 2020, 9:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details