தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

டொனால்டு டிரம்ப் - ஜோ பிடன் இறுதிகட்ட விவாதம்! - ஜோ பிடன்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், ஜோ பிடன் இடையிலான இறுதிக்கட்ட நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சி டென்னஸில் உள்ள நாஷ்வில்லே பல்கலைக்கழகத்தில் காரசாரமாக நடைபெற்றது.

டொனால்டு டிரம்ப்- ஜோ பிடன் இறுதிகட்ட விவாதம்
டொனால்டு டிரம்ப்- ஜோ பிடன் இறுதிகட்ட விவாதம்

By

Published : Oct 23, 2020, 9:13 AM IST

Updated : Oct 23, 2020, 10:44 AM IST

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டெனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி நடுநிலையாளர் முன்பு அதிபர் வேட்பாளர்கள் தங்களது கொள்கைகள், திட்டங்கள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்த நேருக்கு நேராக மூன்று விவாதங்களை நடத்த வேண்டும்.

அந்த வகையில், அதிபர் வேட்பாளர்களான டொனால்டு டிரம்ப், ஜோ பிடனுக்கு இடையே கடந்த மாதம் 29ஆம் தேதி ஒஹிகோ மாகாணத்தில் முதல் நேரடி விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கிடையே டிரம்ப் கரோனாவால் பாதிக்கப்பட்டதால் இரண்டாவது விவாத நிகழ்ச்சி காணொளி காட்சி வாயிலாக கடந்த 15ஆம் தேதி புளோரிடா மாகாணத்தில் நடத்தத் திட்டமிட்ட நிலையில், ட்ரம்ப் ஒத்துழைப்பு தராததால் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இறுதிக்கட்ட நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சி டென்னசியிலுள்ள நாஷ்வில்லே பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதற்கு நடுவராக கிறிஸ்டன் வெல்கர் பங்கேற்கிறார். இவ்விவாதத்தில் கரோனா வைரஸ், அமெரிக்க குடும்பத்தினர், பருவநிலை மாற்றம், தேசிய பாதுகாப்பு உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன.

முதலில் பேசிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்," அமெரிக்காவில் பல மாகாணங்களில் கரோனா தொற்று குறைந்து வருகிறது. நாட்டில் இறப்பு விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் கரோனாவுக்கு தடுப்பூசி வந்துவிடும். அமெரிக்காவுக்கு கரோனா பரவ நான் காரணமில்லை; தவறு செய்தது சீனாதான். வடகொரிய விவகாரத்தை ஒபாமா சிக்கலாக்கி வைத்திருந்தார்.

அந்த விவகாரத்தில் ஒபாமா செய்ய முடியாததை நாங்கள் செய்தோம். சீனா, ரஷ்யா, உக்ரைனிடம் இருந்து பணம் எதுவும் பெறவில்லை என்று ஜோ பிடனின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்தார். இதனைதொடர்ந்து பேசிய ஜோ பிடன், அமெரிக்க தேர்தலில் குறுக்கிட வெளிநாட்டு சக்திகள் முயற்சிப்பதாகவும், சீனாவில் டொனால்ட் ட்ரம்புக்கு ரகசிய வங்கிக் கணக்குகள் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய வரியையே கட்டவில்லை. ஜனவரி மாதமே கரோனா பற்றி தெரிந்திருந்தும் ஏன் சொல்லவில்லை? டிரம்ப் ஏன் முகக் கவசம் அணிவதில்லை? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். டிரம்பின் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது. தளர்வுகளை வழங்கும் அரசு வைரஸ் பரவலை தடுக்க வழிமுறைகளை வகுக்கவில்லை என்றும் பிடன் கடுமையாக விமர்சித்தார்.

Last Updated : Oct 23, 2020, 10:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details