இன்று உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. உலகத் தலைவர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், விளக்கு ஏற்றுவது போல் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தீபாவளி வாழ்த்து தெரிவித்த ட்ரம்ப்! - State Mike Pompeo
வாஷிங்டன்: இன்று (நவ.14) உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட்டுவரும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
Trump
அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைத்து இந்தியர்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் தொலைவில் இருந்தாலும் இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொண்டுவரட்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.