அமெரிக்க அதிபர் தேர்தல் நவ.3ஆம் தேதி நடந்து முடிந்தது. இத்தேர்தலின் தாக்கம் உலகம் முழுக்க எதிரொலிக்கும் என்பதால் அடுத்த அதிபர் யார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்களிடத்திலும் காணப்படுகிறது.
இத்தேர்தலில் ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்பும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் கிட்டத்தட்ட இரு நாள்களாக நடந்துவருகின்றன. பெரும்பான்மைக்கு தேவையான 270 இடங்களில் 264 இடங்களை பெற்று ஜோ பைடன் முதலிடத்தில் உள்ளார்.
214 இடங்களுடன் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பின்னடைவை சந்தித்து வருகிறார். இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டரில், “ஸ்டாப் த கவுண்ட்” என பதிவிட்டுள்ளார். இது சர்சையுடன் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், அமெரிக்க அதிபர் தேர்தல் முறை சற்று வித்தியாசமானது. அங்கு மூன்று விதமான படிநிலைகள் உள்ளன. அவை, மாநில தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் அதிபர் தேர்தல் ஆகும். ஆகவே யார் வெற்றி பெறுவார் என்பது ஐபிஎல் போட்டியின் கடைசி ஓவர் போல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது.
இதையும் படிங்க: டர்ம்ப், பிடன் இருவருக்கும் மேஜிக் நம்பர் கிடைக்கவில்லை என்றால்?