தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பச்சை நிறத்தில் பிறந்த நாய்க்குட்டி: புகைப்படங்கள் வைரல் - viralnews

டென்வர்: நாய் ஒன்று பச்சை நிறத்தில் குட்டி போட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

நாய்க்குட்டி

By

Published : Oct 19, 2019, 7:01 PM IST

கொலராடோ நாட்டில் வசித்துவருபவர் கேடி வில்லியம்ஸ். இவர் அமி என்று அழைக்கப்படும் மூன்று வயது நாய் ஒன்றை வளர்த்துவந்தார். அமி நாய் கிரேட் டேன் வகையைச் சேர்ந்தது. சில நாள்களுக்கு முன்பு எமி நாய் ஒன்பது குட்டிகளைப் போட்டுள்ளது. அதில் ஒரு நாய்க்குட்டி மட்டும் பச்சை நிறத்தில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் வில்லியம்ஸ்.

பச்சை நிறத்தில் பிறந்த நாய்க்குட்டி

இது குறித்து அவர் கூறுகையில், "முதலில் அந்த நாய்க்குட்டியை நாங்கள் கறுப்பு அல்லது காவி நிறம் என்று நினைத்தோம். பின்னர் மொபைல் வெளிச்சத்தில் பார்த்தபோதுதான் நாய்க்குட்டி பச்சை நிறத்தில் இருந்தது. இதைக்கண்டு முதலில் அதிர்ச்சிதான் அடைந்தோம். ஆனால் பிலிவெர்டின் (biliverdin) எனப்படும் வேதிப்பொருள் காரணமாக நாய்க்குட்டி பச்சை நிறத்தில் பிறக்க வாய்ப்புள்ளது என்பதை ஒரு செய்தித்தாளில் படித்திருந்தேன். மேலும் பச்சை நிறம் நிரந்தரம் கிடையாது சீக்கிரமே பழைய நிறத்திற்கு மாறிவிடும். இந்த வகை அரிதானதுதான்; ஆனால் ஒருபோதும் ஆபத்தானது இல்லை. எங்களுக்கு பச்சை நிறம் நாய்க்குட்டி ரொம்ப பிடிச்சிருக்கு. பார்ப்பதற்கு ஷாம்ராக் நாய்க்குட்டி போலவே இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

தற்போது பச்சை நிறம் நாய்க்குட்டியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது

இதையும் படிங்க : தன் குழந்தை போலவே முதலையை தோளில் சுமந்து சென்ற வனத் துறை அலுவலர்!

ABOUT THE AUTHOR

...view details