தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசில், ஈகுவடார், பெரு, சுரினாம், ஃபிரான்ஸ் கயானா, வெனிசுலா, கயானா, பியா, பொலிவியா உள்ளிட்ட ஒன்பது நாடுகளில் அமேசான் மழைக்காடு பறந்துவிரிந்து இருக்கிறது. இந்தக் காட்டில் கடந்த வாரம் தீப்பற்றிக் கொண்ட விபத்தில் ஏராளமான அரியவகை மரங்கள், விலங்குகள், பறவைகள் உயிரிழந்தன.
தீ தீண்டாத அரியவகை மரம்
இந்நிலையில் வடக்கு பிரேசில் காட்டுப் பகுதியில் உள்ள டினிஸி எக்செல்சா (Dinizia Excelsa) என்னும் அரியவகை மரம் ஒன்றின் மீது தீயானது தொட்டுக்கூடப் பார்க்காத அபூர்வம் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமேசான் காடுகளில் கடும் மழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கில் கூட இந்தவகை மரங்கள் சேதம் அடைவதில்லை என்று கூறப்படுகிறது.
டினிஸி எக்செல்சா மரம் (Dinizia Excelsa) டினிஸி எக்செல்சா மரத்தின் சிறப்பம்சம்
- இந்த மரமானது சுமார் 288 அடி உயரம் வளரக்கூடியது.
- டினிஸி மரத்தின் எடை 62 டன் இருக்கக்கூடும்.
- இந்த மரத்தின் மேல் வளரக்கூடிய இலைகள் குடை வடிவில் காட்சியளிக்கும்.
- இதில் பூ, பருப்பு போன்ற சாப்பிடக்கூடிய விதைகள், உள்ளிட்டவை காய்க்கும்.