தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மூளை அறுவை சிகிச்சையை முடித்து மரடோனா வீடு திரும்பினார்!

பிரபல கால்பந்தாட்ட வீரர் மரடோனா, நவம்பர் 3ஆம் தேதி அவசர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு சப்டுரல் ஹீமாடோமா என்ற நோய் கண்டறியப்பட்டு மூளைக்கு வெளியில் இருந்த ரத்தக் கட்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

Diego Maradona leaves
Diego Maradona leaves

By

Published : Nov 12, 2020, 1:58 PM IST

புவெனஸ் அயர்ஸ்: கால்பந்து ஜாம்பவானான டியாகோ மரடோனாவுக்கு நவம்பர் 3ஆம் தேதி மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று வீடு திரும்பினார்.

60 வயதான மரடோனா, புவெனஸ் அயர்ஸிலுள்ள ஒலிவோஸ் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

அவர் நகரின் வடக்கு புறநகரிலுள்ள டைக்ரேவில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக, அவரது வழக்கறிஞர் மத்தியாஸ் மோர்லா கூறுகையில், 1986 ஃபிஃபா உலகக் கோப்பை வென்றவர், அவரது வாழ்க்கையின் கடினமான நேரத்தை தற்போது வென்று, நன்றாக உணர்கிறார் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details