தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

’மோசமாகவுள்ளது, ஆனால் கட்டுப்பாட்டில் உள்ளது’ - கரோனா பரவல் குறித்து வெள்ளை மாளிகை

வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோனா பரவல் மோசமான நிலையில் இருந்தாலும், நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

White House
White House

By

Published : Jul 13, 2020, 6:46 AM IST

அமெரிக்காவில் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவிட்-19 தொற்று நடவடிக்கைகளில் அமெரிக்க அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாக எதிர் கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தினசரி செய்தியாளர் சந்திப்பில் பேசிய அந்நாட்டின் சுகாதாரத் துறை உதவி செயலரும், கரோனா வைரஸ் டாஸ்க் ஃபோர்ஸ் உறுப்பினருமான பிரட் ஜிரோயர் கூறுகையில், "நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் போதும், நிலைமை கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

இதற்கு நிறைய முயற்சி தேவைப்படுகிறது. மேலும் இந்தத் தொற்றை எதிர்த்துப் போராட பொதுமக்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து முகக்கவசம் அணிவது குறித்துப் பேசிய அவர், "பொது இடங்களில் மக்கள் மாஸ்க்குகளை அணிய வேண்டும். இது முற்றிலும் இன்றியமையாதது. கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட ஹாட் ஸ்பாட் பகுதிகளில் உள்ள பொதுமக்களில் 90 விழுக்காட்டினர் வரும் வாரத்தில் மாஸ்க்குகளை அணிவார்கள் என்று நம்புகிறோம். அப்படி பொதுமக்கள் உரிய முறையில் மாஸ்க்குளை அணியவில்லை என்றால், வைரஸை கட்டுப்படுத்துவது கடினம். மாஸ்க்குகளை அணிவதால் நமக்கு எவ்வித தீங்கும் ஏற்படப் போவதில்லை” எனக் கூறினார்.

கரோனா வழக்குகள் அதிகரிக்கும் மாநிலங்களில் இன்னும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்த வேண்டுமா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பிரட் ஜிரோயர், "இவை குறித்து நாம் பரிசோதிக்க வேண்டும். வரும் காலங்களில், குறிப்பாக இலையுதிர்காலத்தில் நிலைமை மேலும் மோசமாக இருக்கக்கூடும்.

அந்தக் காலகட்டத்தில், மாதத்திற்கு நாம் தற்போது எடுப்பதைவிட பல மில்லியன் சோதனைகள் கூடுதலாக எடுக்க வேண்டும். மேலும், ஒரே நேரத்தில் காய்ச்சல் மற்றும் கோவிட்-19 தொற்றால் மக்கள் பாதிக்கப்படலாம் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. இது உண்மையில் நல்ல ஒரு செய்தி அல்ல" என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: சீனாவின் ’கந்துவட்டி கடன்வலை ராஜதந்திரம்’ - தத்தளிக்கும் பின்தங்கிய கடனாளி நாடுகள்

ABOUT THE AUTHOR

...view details