அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினத்தவர் கடந்தாண்டு காவலரால் சர்ச்சைக்குரிய முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் உலகையே உலுக்கிய நிலையில், நிறவெறிக்கு எதிராக Black Lives Matters என்ற இயக்கம் உருவெடுத்தது.
காவலருக்கு 22.5 ஆண்டுகள் சிறை தண்டனை
இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட காவலர் டெரிக் சாவின் மீதான வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி பீட்டர் சஹில், காவலர் டெரிக் சாவினுக்கு 22.5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளார்.