அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர், காவல் துறை பிடியில் சிக்கி சாலையிலேயே உயிரிழந்த சம்பவம் அந்நாட்டு மக்களைக் கொதிக்கச் செய்துள்ளது.
உலகளவில் கடும் எதிர்ப்பலைகளை உண்டாக்கிய ஜார்ஜ் ஃப்ளாய்டின் உயிரிழப்புக்கு நீதி கோரியும், அதிகரித்து வரும் அமெரிக்க காவல் துறையினரின் நிறவெறி வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தியும் அந்நாடு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்தப் பின்னணியில், வன்முறை உள்ளிட்ட அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அமெரிக்க காவல் துறையினரைப் பொறுப்பாக்கும் புதிய சட்டம் ஒன்றை ஜனநாயகக் கட்சியினர் முன்மொழிந்துள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் கேரன் பாஸ் கூறுகையில், "வரலாற்று திருப்பு முனையை நம் நாடு அடைந்துள்ளது. காவல் துறை கலாசாரம் மாற வேண்டிய தருணம் இது. இந்தச் சட்டம் அதனை முன்னெடுத்துச் செல்லும் என நம்புகிறோம்" என்றார்.
இதையும் படிங்க : 75 நாள்களுக்குப் பின் திறக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள்