தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'ராணுவப் புரட்சிக்கான முயற்சி தோற்கடிப்பு' - வெனிசுவேலா அதிபர் - victory

கராகஸ்: வெனிசுவேலாவில் நாளுக்குநாள் அரசியல் நெருக்கடி அதிகரித்துவரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவாய்டோ மேற்கொண்ட ராணுவப் புரட்சிக்கான முயற்சிகள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டதாக அந்நாட்டு அதிபர் மடூரோ தெரிவித்துள்ளார்.

அதிபர் மடூரோ

By

Published : May 1, 2019, 1:51 PM IST

வெனிசுவேலாவில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்ததையடுத்து, ராணுவம் தன் பக்கம் உள்ளதாக அந்நாட்டு எதிர்கட்சித் தலைவர் ஜூவான் குவாய்டோ கூறினார். மேலும், இதனை சுட்டிக்காட்டி நாட்டு மக்கள் அனைவரும் மடூரோவுக்கு எதிரான போராட்டத்தில் களமிறங்க வேண்டும் என்றும், இது விடுதலைக்கான இறுதிக்கட்ட போராட்டம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனையடுத்து தலைநகர் கராகஸ்ஸில் நடைபெற்ற போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர மடூரோ பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். குறிப்பாக ராணுவ வாகனத்தை போராட்டகாரர்கள் மீது ஏற்றிய சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, அங்கு நிலவும் அசாதாரண சூழல் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் மடூரோ, "ராணுவப் புரட்சிக்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஜூவான் குவாய்டோவின் அந்த முயற்சிகள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டுவிட்டன" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details