அமெரிக்காவில் உள்ள மினியாபோலிஸ் நகரில், காவலர் ஒருவரின் பிடியில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கறுப்பின அமெரிக்கர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டையே உலுக்கிவருகிறது. இச்சம்பவத்திற்கு எதிராக அமெரிக்கா உட்பட கிரீஸ், இத்தாலி, டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ்,ஆஸ்திரேலியா ஆகிய பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் பெரியளவில் நடைபெற்றுவருகின்றன.
மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது அவமதிப்பான செயல் -அதிபர் ட்ரம்ப்! - அதிபர் ட்ரம்ப் வேதனை
வாஷிங்டன்: இந்திய தூதரகத்தில் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது மிகவும் அவமதிப்பான செயல் என அதிபர் ட்ரம்ப் வேதனை தெரிவித்தார்.
குறிப்பாக, கடந்த ஜூன் 2ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் ஊடுருவிய சமூக விரோதிகள் சிலர் வாஷிங்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தில் இருக்கும் மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக இந்திய தூதரகம் அளித்த புகாரின் பேரில், அமெரிக்க காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
சிலையை சீரமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுகையில், “ மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது மிகவும் அவமதிப்பான செயல்” என்றார். இவரை போலவே அமெரிக்காவில் உயர் பதவியில் இருப்போர் பலர் காந்தி சிலை சேதப்படுத்திய சம்பவத்திற்கு தங்களது வேதனையை தெரிவித்தனர். வாஷிங்டன் டிசியில் காந்தியின் சிலையை முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் முன்னிலையில் செப்டம்பர் 16, 2000இல் தனது பயணத்தின் போது அர்ப்பணித்தார்.