மெரிடரேனியன் கடலில் உள்ள ஜிப்ரால்டர் பகுதி தற்போது பிரிட்டன் கட்டுப்பாட்டில்உள்ளது. அதன் அருகே சென்றுகொண்டிருந்த க்ரேஸ்-1 என்ற ஈரான் கப்பலை ஜிப்ரால்டர் கடற்படையினர் கைப்பற்றினர்.
அந்த கப்பல் சிரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையை மீறி எண்ணெய் எடுத்துச் சென்றதாக பிரிட்டன் குற்றம்சாட்டியது. பின்னர், இதுதொடர்பாக ஜிப்ரால்டர் நீதிமன்றத்தில கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையில், ஈரான் எண்ணெய் கப்பலை 30 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.