உலகம் முழுவதும் தற்போதும் லாவா வெளியிடும் திறனை கொண்ட எட்டு எரிமலைகளில், மசயாவும் ஒன்றாகும். இந்த எரிமலை சுமார் 1,100 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை உமிழும்.
அமெரிக்காவைச் சேர்ந்த நிக் வாலெண்டா, பிரபலமான ஃபிளையிங் வாலெண்டா சர்க்கஸ் குடும்பத்தின் 7ஆவது தலைமுறை கலைஞர் ஆவார். சர்க்கஸ் குடும்பத்தைச் சேர்நத நிக் துணிச்சல் பற்றி சொல்லி தரவா வேணும். இருப்பினும், அவரின் இந்த எரிமலை சாகசப் பயணம் ஒரு நிமிடம் அனைவரையும் உறைய வைத்துவிட்டது.
பலரும் இவர் 'ராட்சனா மனுசனா' என்று கேள்விகள் எழுப்பிவருகின்றனர். "மசயா" எரிமலை மீது நிக் நடைப்பயணம் மேற்கொள்ளும் போது இருபுறமும் வயர்களில் இணைக்கப்பட்டிருந்தார். மேலும், அதித வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள கேஸ் மாஸ்க்கும், பிரத்யேக முகமூடியும் அணிந்திருந்தார்.
வெப்பத்தின் விளைவைக் குறைக்க, அவரது காலணிகள் மிகவும் தடிமனாக வடிவமைக்கப்பட்டிருந்தது. நிக் வாலெண்டாவின், மசயா எரிமலை மீது மேற்கொண்ட பயணம் பார்ப்போர் அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்தது.
இவர், சர்வசாதாரணமாக சுமார் 1,800 அடி தூரம் நீளமான வயரில் நடந்து சென்று சாதணை படைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"இது மிகவும் ஆச்சரியமான ஒன்று. அந்த எரிமலை கீழே நான் பார்த்தபோது லாவா எரிகுழம்புகள் என்னை முழுவதும் மயக்கிவிட்டது. என்னால் அதை வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை" என்றார்.
எரிமலை குமுறும் போது வெளிவரும் உருகிய பாறைக் குழம்பு (லாவா) மீது நிக் வாலெண்டா வயரில் நடந்து சென்ற திகில் சம்பவம் பற்றிய காணொலி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. லாவா எரிமலையின் துளையில் இருந்து வெளிவருகையில் இதன் வெப்பநிலை 700 முதல் 1200 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஹாங்காங்கில் பொமெரேனியன் நாய்க்கு கொரோனா உறுதி