தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்க அதிபர் தேர்தல் : பிடன் வென்றால் பெட்ரோல் விலை மீண்டும் உயருமா? - ட்ரம்ப்

அடுத்த மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றிபெற்றால் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை அதிகரிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Crude oil
Crude oil

By

Published : Oct 17, 2020, 11:24 AM IST

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜோ பிடன் போட்டியிடவுள்ளார்.

தற்போது, பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் கூட்டமைப்பில் அதிபர் ட்ரம்ப்பின் ஆதிக்கம் அதிகமாகவுள்ளது. இதனால் கச்சா எண்ணெயின் விலை கட்டுக்குளேயே உள்ளது.

ஆனால், அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றிபெறும் பட்சத்தில் அது ஒபெக் நாடுகளுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. அதன் பின், ஒபெக் நாடுகள் தங்கள் நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவைக் குறைக்கலாம் என்றும், கச்சா எண்ணெய் உற்பத்தி குறைவதால் பெட்ரோலியப் பொருள்களின் விலை அதிகரிக்கலாம் என்று மோதிலால் ஓஸ்வால் நிதி சேவைகள் நிறுவனம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை நீட்டிக்க புதின் விருப்பம்!

ABOUT THE AUTHOR

...view details