டெக்சாஸ் பகுதியில் வசித்துவருபவர் 14 வயதுள்ள மார்செலா கோன்சலஸ் (Marceala Gonzalez). இவருக்குச் சொந்தமாகப் பக்கில்ஹெட் மாடு ஒன்று இருக்கிறது. அந்த மாட்டினுடைய கொம்பின் நீளம் 11 அடியும் அகலம் 1.8 அங்குலம் இருக்கும் என அளவிடப்பட்டுள்ளது. கடந்த அக். 4ஆம் தேதி ஒக்லஹோமாவில் நடைபெற்ற ஹார்ன் ஷோகேஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பக்கில்ஹெட் மாடு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மாடு அதிகாரப்பூர்வமற்ற முறையில் கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மார்செலாவுக்கு ஐந்து ஆண்டுக்கு முன்பு ஓவியப் போட்டியில் பரிசாகத் தான் பக்கில்ஹெட் மாடு கிடைத்துள்ளது. ஆனால் அந்த மாடு உலக சாதனையில் பெயர் பதிக்கும் எனக் கண்டிப்பாக நினைத்திருக்க மாட்டார் அந்தச் சிறுமி.