தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் மக்கள் வாழ்க்கை முறைகளை மாற்றியமைக்க வேண்டியிருக்கும்!

ஒட்டாவா: கரோனா வைரஸ் தொற்றுநோயிக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் மக்கள் தங்களது வாழ்க்கை முறைகளை மாற்றியமைக்க வேண்டியிருக்கும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

COVID-19 will create changes in our society even if pandemic ends: Canadian PM
தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் மக்கள் வாழ்க்கை முறைகளை மாற்றியமைக்க வேண்டியிருக்கும்!

By

Published : May 15, 2020, 7:25 PM IST

உலக நாடுகளை ஆட்டிப்படைத்துவரும் கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய் கனடாவில் தீவிரம் காட்டி வருகின்றது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக இதுவரை 73 ஆயிரத்து 401 பேர் பாதிக்கப்பட்டும், 5 ஆயிரத்து 472 பேர் உயிரிழந்தும் உள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 91ஆக அதிகரித்துள்ளது.

கோவிட்-19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கனடாவில் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இது தொடர்பாக நேற்று (மே 14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “நம் சமூகத்தில் கோவிட்-19 பாதிப்பு பல மாற்றங்களை உருவாக்கி வருகிறது. கடந்த ஆண்டோ அல்லது அதற்கு முந்தைய ஆண்டுகளிலோ நாம் கண்ட மாற்றங்களை விடவும் தற்போது சில நாள்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள என்பதை நாம் அறிவோம். கோவிட்-19க்கு எதிராக மருந்து கண்டுபிடிக்க பல நாடுகளும் தீவிரம் காட்டிவருகின்றன. இருப்பினும், வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாம் இதிலிருந்து விரைவில் மீள்வோம்.

மீன்வளத்துக்கான சிஏடி 334 மில்லியன் உள்ளிட்ட தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளை ஆதரிக்கும் திட்டங்களையும் ட்ரூடோ அறிவித்தது. கரோனா வைரஸ் கனடிய மீனவர்களின் வாழ்வாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மீன் பிடிப்பை செய்துவரும் கனடியர்களின் உழைப்பால் நாம் சத்தான உணவை வழங்க பெற்று வந்திருக்கிறோம். கடும் உழைப்பால் நாம் உணவு விநியோகம் அடைந்து வந்திருக்கிறோம். அவர்கள் வாழ்வில் கரோனா வைரஸ் குறிப்பிடத்தக்க மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

அவர்களுக்கு தோள் கொடுக்கும் விதமாக மீன்வளத்துக்கான சிஏடி 334 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது நமது மீன்பிடி மற்றும் கடல் உணவுத் தொழிலின் நம்பியுள்ள மக்களின், வணிகர்களின் சுமையை குறைக்க உதவும். அவர்களுக்காக அரசு உறுதியாக துணையிருக்கும், நாங்கள் இங்கு இருக்கிறோம்”என்றார்.

கோவிட்-19 பரவல் காரணமாக கனேடிய கடல் உணவுப் பொருள்கள் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது கனேடிய மீனவர்களின் வாழ்வாதாரத்தில் கடும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த அறிவிப்பு, இந்த நெருக்கடி காலங்களில் மீன் அறுவடை செய்பவர்களுக்குத் தேவையான ஆதரவைப் பெற முடியும் என்பதை உறுதிசெய்கிறோம்.

இதையும் படிங்க :கரோனா: உலகளவில் மூன்று லட்சத்தைக் கடந்த உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details