இதுகுறித்து அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கேல் மேக்கௌல் வெளியிட்டுள்ள அரிக்கையில், "கரோனா தொற்றின் தோற்றம் குறித்து நாங்கள் தொடர்ந்து ஆராய்ந்துவருவதிலிருந்து அது வெட் மார்கெட்டிலிருந்து உருவானது என்ற கருத்தை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என நான் நம்புகிறேன்.
ஏனெனில் இந்த அறிக்கைபடி, பெரும்பான்மையான ஆதாரங்கள் நம்மை வூஹான் ஆய்வகத்திற்கே அழைத்துச் செல்கின்றன" என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் Gain-of-function எனப்படும் கிருமிகளை அதிகமாகப் பரப்ப செய்யும் ஆய்வு ஒன்று பாதுகாப்பற்ற சூழலில் நடைபெற்று வந்ததையும் சுட்டிக்காட்டியது.
கரோனா தொற்று வூஹான் ஆய்வகத்தில் இருந்து தோன்றியது என்ற தகவல் வெளியானதை அடுத்து உலகெங்கிலும் உள்ள பல ஆராய்ச்சியாளர்கள் கரோனாவின் பின்னணி, தோற்றம் குறித்தான விசாரணையை புதிதாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.