கோவிட்-19 அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அமெரிக்க பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.8 விழுக்காடு சரிவைச் சந்திக்கும் என்று அந்நாட்டின் அரசு அரசு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
"கரோனா பரவலைத் தடுக்க அனைவரையும் வீட்டிலேயே இருக்கும்படி அரசு அறுவுறுத்திருந்தது. இதன் காரணமாக தொழில் துறையினரும் பள்ளி நிர்வாகங்களும் தொலைதூரப் பணிக்கு மாறியுள்ளனர். வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளைக் குறைத்துள்ளனர். தேவையற்ற செலவுகளைக் குறைத்து அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் செலவுகளைச் செய்கின்றனர்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "அமெரிக்கா சந்தித்துள்ள இந்தப் பொருளாதார சரிவு என்பது இரண்டாவது காலாண்டில் மிக மோசமாக மாறும். 2019ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.1 விழுக்காடாக இருந்தது.
2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கோவிட்-19 தொற்றால் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிவது கடினம். பொருளாதார சரிவை ஒட்டுமொத்தமாகவே கண்டறிய முடியும். கரோனா தொற்றால் மட்டும் பொருளாதாரம் எவ்வளவு தூரம் சரிந்துள்ளது என்பதைக் கண்டறிய இயலாது.