உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் நிலைகுலைந்துள்ள அமெரிக்கா மிகப்பெரும் உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் சந்தித்துவருகிறது.
இந்நிலையில், அமெரிக்க அமைச்சரவை கூட்ட உறுப்பினர்கள் சிலர் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், வேலைவாய்ப்பின்மையைத் தடுக்கவும் சில முக்கிய நடவடிக்கைகளை அமல்படுத்துமாறு அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதில், கரோனா பெருந்தொற்றின் காரணமாக நமது நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, தொழிலாளர் துறையின் புள்ளி விவரங்களின்படி, 302 மில்லியன் அமெரிக்கர்கள் வேலையிழந்து தவிப்பதாகக்கூறி, அரசிடம் உதவிகள் கோரியுள்ளதாக தெரிவித்தனர்.
அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு கடந்த மார்ச் மாத்திலிருந்து ஐந்தில் ஒரு அமெரிக்கர் வேலையிழந்து தவித்துவருவதாக கூறிய அவர்கள் அதிபர் ட்ரம்பிற்கு சில யோசனைகளையும் கூறியுள்ளனர்.