தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்க பொருளாதாரத்துக்கு ஆலோசனை கூறும் இந்தியர் - நியூயார்க் ஆளுநர் அன்ட்ரூ கூமோ

நியூயார்க்: கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சீர்செய்யும் ஆலோசனைக் குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சித்தார்த்தா முகர்ஜி இடம்பிடித்துள்ளார்.

Siddartha mukerjee
Siddartha mukerjee

By

Published : May 25, 2020, 10:30 PM IST

உலகளவில் கரோனா பாதிப்பின் தாக்கம் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது வல்லாதிக்கச் சக்தியாகக் கருதப்படும் அமெரிக்காதான் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இதுவரை அந்நாட்டில் சுமார் 17 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 99 ஆயிரத்தைத் தாண்டி லட்சத்தை நெருங்குகிறது.

குறிப்பாக, அந்நாட்டின் வர்த்தக மையமாகக் கருதப்படும் நியூயார்க் கரோனாவல் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள சுகாதார சிக்கலுக்கு நிகராக பொருளாதார சிக்கலும் தீவிரத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை சீர்செய்யும் விதமாக பல்வேறு துறை சார்ந்த நிபுணர் குழு ஒன்றை நியூயார்க் ஆளுநர் அன்ட்ரூ கூமோ அமைத்துள்ளார்.

15 நபர் கொண்ட இந்தக்குழுவின் தலைவாரக கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எரிக் ஸ்கிமிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவ நிபுணரான சித்தார்த்தா முகர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் புற்றுநோய் குறித்த தனது நூலுக்காக கடந்த 2011ஆம் ஆண்டு புலிட்சர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆப்ரிக்காவில் ஒரு லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details