இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸானது சீனா மட்டுமல்லாமல் அண்டை நாடுகளுக்கும் பரவிவருவதால் உலகளாவிய சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் பலவீனமான சுகாதார அமைப்புகள் கொண்ட நாடுகளுக்குப் பரவக்கூடும் என்பது கவலை அளிக்கிறது. இதற்கிடையில், அமெரிக்கா தனது குடிமக்களுக்கு சீனாவிற்குச் செல்லத் தடைவிதித்துள்ளது. சீனாவில் கரோனா வைரஸால் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் ஹூபே மாகாணத்துடன் சேர்த்து கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற நாடுகளைப் பொறுத்தவரை மொத்தம் 18 நாடுகளில் 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் உயிரிழப்புகள் இல்லை.
பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து ஜெர்மனி, ஜப்பான், வியட்நாம், அமெரிக்காவில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வர்த்தகம், சீனாவுக்குச் செல்வோரின் பயணத்தை தடைவிதிக்க கரோனா வைரஸ் தவிர வேறு எந்த காரணமும் இல்லை" என அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கரோனா வைரஸ் எதிரோலி: சீனாவில் இருந்து வந்த மாணவர்கள் தொடர் கண்காணிப்பு!