உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை. இதில் அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது. மேலும்1,037 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நியூயார்க், கலிபோர்னியா, வாஷிங்டன், புளோரிடா, நியூ ஜெர்சி உள்ளிட்ட 11 மாநிலங்கள் அவசர நிலையை அறிவித்துள்ளன. அதுமட்டுமின்றி பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த ஆண்டு சாதாரண காய்ச்சலால் 37,000 அமெரிக்கர்கள் இறந்தனர். இது ஆண்டுக்கு சராசரியாக 27,000 முதல் 70,000 வரையுள்ளது. அப்போது எல்லாம் எதுவும் மூடப்படவில்லை, வாழ்க்கையும் பொருளாதாரமும் தொடர்கிறது. ஆனால் தற்போது கொரோனா வைரஸில் 546 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீங்களே நினைத்து பாருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...'எங்களிடம் நடக்காது' - பாஜகவுக்கு சிவசேனா எச்சரிக்கை