உலகம் முழுவதும் கரோனா தீநுண்மி பாதிப்பால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை கரோனாவால் 41 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு லட்சத்து 80 ஆயிரத்து 470 பேர் உயிரிழந்தனர்.
கரோனா தீநுண்மி முதல்முறையாகக் கண்டறியப்பட்ட சீனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 901ஆக இருந்த நிலையில், 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 10 நாள்களில் 14 பேர் புதிதாக கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்கொரியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 874 பேராக அதிகரித்துள்ளது. இதுவரை 256 பேர் உயிரிழந்தனர். அதில் ஒன்பதாயிரத்து 610 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.