கொலம்பியாவில் போதைப்பொருட்கள் அதிகம் விளையும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதமாக கஞ்சா உற்பத்தி செய்தல் உள்ளிட்டவை கொலம்பியாவில் அதிகம் நடைபெறுகிறது.
சவப்பெட்டிக்குள் 300கிலோ கஞ்சா கடத்தல்! - 300கிலோ கஞ்சா
கொலம்பியாவில் சவப்பெட்டிக்குள் வைத்து கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சாவை அந்நாட்டு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
coffin
இந்நிலையில் பாம்லோனா-குக்கூட்டா சாலையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றில் சோதனை செய்தபோது சவப்பெட்டி இருந்துள்ளது.
தனி நபர் சவப்பெட்டியை ஏன் எடுத்துச் செல்கிறார் என்று சந்தேகித்த காவல்துறையினர், சவப்பெட்டியை திறந்து பார்த்து சோதனை செய்தனர். அதில், பொட்டலம் பொட்டலமாக மொத்தம் 300 கிலோ கஞ்சா இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த காவல் துறையினர் இது தொடர்பாக கார் ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.