அமெரிக்காவில் உள்ள தென்கிழக்கு அலாஸ்காவில் சுற்றுலாப் பயணிகள் சென்ற விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த ஆறு பேர் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. விமானத்தில் இருந்த ஐந்து பயணிகள் ஹாலாந்து அமெரிக்கா லைன் க்ருஸ் கப்பலில் பயணம் செய்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. கெச்சிகன் என்னும் இடத்தில் இந்தக் கப்பல் நிறுத்தப்பட்டது.