தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளைக் கொண்டு வருவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய வெளிநாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக கடந்த 28ஆம் தேதி இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான லண்டன் நகரத்துக்குச் சென்றார். அங்கு, தொழில் தொடர்பான பல்வேறு 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
உயர் தொழிற்நுட்ப நிறுவனங்களுக்குள் சிங்க நடைபோடும் முதலமைச்சர்..! - மாசில்லா எரிசக்தி உற்பத்தி
அமெரிக்கா: வெளிநாடு சுற்றுபயணத்தில் இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, அமெரிக்காவில் சான் ஃப்ரான்சிஸ்கோ நகரிலுள்ள உயர் தொழிற்நுட்ப நிறுவனங்களை சென்று பார்வையிட்டு, அதன் சிறப்பம்சங்களை தெரிந்துகொண்டார்.
![உயர் தொழிற்நுட்ப நிறுவனங்களுக்குள் சிங்க நடைபோடும் முதலமைச்சர்..!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4355871-thumbnail-3x2-edappadi.jpg)
இந்நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்க சென்றடைந்தார் முதலமைச்சர். தொடர்ந்து இன்று சான் ஃப்ரான்சிஸ்கோ நகரிலுள்ள மாசில்லா எரிசக்தி உற்பத்தி நிறுவனமான புளூம் எனர்ஜி நிறுவனத்தை முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் அந்நிறுவன நிர்வாகிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கினார்.
அதேபோல வேகமாக வளர்ந்து வரும் டெஸ்லா மின்சார வாகன நிறுவனத்தையும் முதலமைச்சர் பார்வையிட்டு, அரசு சார்பில் அங்குள்ள டெஸ்லா நிர்வாகிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கினார். மேலும், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்காக அந்நிறுவன அதிகாரிகளிடம் அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.