தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஹெச்ஐவி குடிகாரர்களை திருத்தும் 'ஸ்டெப்ட் அப்' வைத்தியம் - ஜெனிபர் எடல்மேன்

ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள் குடியை மறப்பதற்கு 'ஸ்டெப்ட் அப்' என்ற புதிய யுக்தியை ஆராய்ச்சியாளர் ஜெனிபர் எடல்மேன் அறிமுகம் செய்துள்ளார்.

ஸ்டெப்டு அப்

By

Published : May 19, 2019, 2:46 PM IST

ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேர் குடிபோதைக்கு அடிமையாகிவிடுகின்றனர். காரணம் உயிர் வாழ முடியாது என்ற எண்ணமும், மரணம் அவர்களை பின்தொடர்ந்தே துரத்திவருகிறது.

சிவாஜி படத்தில் ரஜினி கூறுவதுபோல் 'இறக்கப்போகும் நாள் தெரிந்துவிட்டால் வாழ்கின்ற நாள் நரகமாகிவிடும்' என்பதை மனதில் வைத்து வழித்தவறி தவறான பாதையை தேர்ந்தெடுத்து குடிக்கு அடிமையாகின்றனர். ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் சந்திக்கும் அவச்சொற்களால் மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் ஏற்படும் கோபம் தேவையில்லாத மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. ஒரு சிலர் தற்கொலை முடிவுக்கு செல்கின்றனர். இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிஃபர் எடல்மேன் என்பவர் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் அவர்களை குடிபோதையில் இருந்து முழுவதுமாக அகற்றிவிட புதிய யுக்தியை வலியுறுத்தியுள்ளார்.

ஆராய்ச்சியாளரான இவர், 'ஸ்டெப்ட் அப்' என்ற சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த 'ஸ்டெப்ட் அப்' என்னும் யுக்தியை மருத்துவமாக தொடர்ச்சியாக 52 வாரங்கள் தவறாமல் கடைப்பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், 'ஸ்டெப்ட் அப்' குறித்து ஆராய்ச்சியாளர் ஜெனிஃபர் எடல்மேன் விளக்கம் அளித்துள்ளார். இதில், 'ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட பல பேர் தினமும் மது அருந்தும் பழக்கத்தை கடைப்பிடிக்கின்றனர். இதனால் ஹெச்ஐவி பாதிப்பு அதிகரிக்கிறது. ஆனால், அப்படிப்பட்டவர்கள் ஒரே நாளில் குடியை நிறுத்த முடியாது. நிறுத்தினால் உயிர் போகும் நிலை ஏற்படுகிறது.

போதைக்கு அடிமை

எனவே, ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர், இந்த 52 வாரத்தில் தினமும் ஒரு சிப் மது அருந்தி வர வேண்டும். முக்கியமாக ஹெச்ஐவிக்கான மருந்துகளை தினமும் சாப்பிட்டு வர வேண்டும். இதனை தினமும் கடைப்பிடித்து வந்தால் உடல் அளவில் நல்ல மாற்றம் ஏற்படும்.

குடியை மறக்க முடியாது, இவை குடியைக் குறைத்துக்கொள்வதற்கான மருத்துவமுறை. காலப்போக்கில் குடி மீதான வெறுப்பு வரத்தொடங்கும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details