தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இன்ஸ்டாகிராமுக்குள் கால்பதித்த அமெரிக்க உளவுத் துறை! - twitter

வாஷிங்டன்: அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ, இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்கைத் தொடங்கியுள்ளது.

உளவுத் துறை வெளியிட்டுள்ள புகைப்படம்

By

Published : Apr 26, 2019, 12:47 PM IST

இது குறித்து சிஐஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உளவுத்துறை குறித்த செய்திகளைப் பகிர்வதற்கும், திறமை வாய்ந்த அமெரிக்கர்களைக் கண்டறிந்து, பணியமர்த்துவதற்கும் இந்த இன்ஸ்டாகிராம் கணக்கு உதவும்.

மேலும், மற்ற நாட்டில் உள்ள உளவுத் துறை செய்யமுடியாத காரியங்களை சிஐஏ எப்படிச் செய்கிறது என்பது குறித்து பயன்பாட்டாளர்கள் தெரிந்து கொண்டு, அவர்களிடையே எங்கள் செயல்பாடு தொடர்பான ஆர்வம் அதிகரிக்கும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 ஜூன் மாதம், ட்விட்டரில் கால்பதித்த சிஐஏ, இதுவரை சுமார் நான்கு ஆயிரத்து 300 முறை ட்வீட் செய்துள்ளது. தற்போது, அந்த கணக்கை 25 லட்சம் பேர் பின் தொடர்ந்துவருகின்றனர்.

சிஐஏ இன்ஸ்டாகிராம் பதிவு

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கிய சிஐஏ தனது முதல் பதிவாக, "என் சிறு கண்களைக் கொண்டு உளவு பார்ப்பேன்" என்ற வாசகத்துடன் மேலே உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details