அமெரிக்காவில் நீண்டகாலமாக இனவெறிக் கொலைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. அதை ஊக்குவிக்கும் செயல்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினத்தவரை காவலர் ஒருவர் கழுத்தில் காலை வைத்து அழுத்திக் கொலைசெய்த சம்பவம் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி, அமெரிக்காவில் பெரும்பாலான இடங்களின் கறுப்பினத்தவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். பல இடங்களில் வெள்ளை இன போராட்ட வீரர்களின் சிலைகள் உடைக்கப்பட்டுவருகின்றன. பெரும்பாலான இடங்களில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் சிலை உடைக்கப்படுகிறது.
1492 காலக்கட்டத்தில் கொலம்பஸ் ஒரு புதிய உலகத்தினை கண்டுபிடித்ததாக அமெரிக்க பாடப்புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் இந்தியாவைத் தேடிவந்த அவர் இந்தியா என நினைத்து அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அமெரிக்காவின் பல சர்ச்சைக்குரிய சிலைகளைப் போலவே கொலம்பஸ் சிலையும் இருந்துவந்தது.
இந்நிலையில் நியூ ஹெவன் நகரில் அமைந்துள்ள கொலம்பஸ் சிலை மீது கறுப்பினத்தவர்கள் மலம் கழித்ததால் அவ்விடத்திலிருந்து அந்தச் சிலை அகற்றப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தற்செயலான எடை அதிகரிப்பு என்றால் என்ன?