உலகம் முழுவதும் கரோனா பெருந்தொற்று பாதிப்பு உச்சத்தை அடைந்துள்ள நிலையில், தென்அமெரிக்க நாடான பிரேசில் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அந்நாட்டில் இதுவரை சுமார் 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு நிலைமை தொடர்ந்து மோசமடைந்துவருவதால் பிரேசில் அரசு பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில், வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ரியோ டி ஜெனிரோவில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஏசுநாதர் சிலை வண்ண ஒளி மூலம் காட்சிப்படுத்தப்பட்டது.