தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சீன அரசின் இஸ்லாமிய இனப்படுகொலையை கண்டிக்கும் பிடன்! - சீனாவின் அடக்குமுறை

வாஷிங்டன்: ஜின்ஜியாங்கின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள உய்குர் இஸ்லாமியர்கள் மீது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை சீன அரசு மேற்கொண்டு வருவதாக ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் கருத்து தெரிவித்துள்ளார்.

சீன அரசின் இஸ்லாமிய இனப்படுகொலையை கண்டிக்கும் பிடன்!
சீன அரசின் இஸ்லாமிய இனப்படுகொலையை கண்டிக்கும் பிடன்!

By

Published : Sep 2, 2020, 5:39 PM IST

அமெரிக்காவில் விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள அந்நாட்டின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் சீனாவில் வாழ்ந்துவரும் சிறுபான்மையினர் மீதான சீன அரசின் அடக்குமுறையை தமது பரப்புரை மேடைகளில் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

ஜின்ஜியாங்கில் உள்ள உய்குர் இஸ்லாமிய இன மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களில் சீன அரசு ஈடுபடுவதாக பல நாடுகளும் சர்வதேச அமைப்புகள், போர்கள ஊடகவியலாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கூறி வருகின்றன. இது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இன சமூகத்தின் மீதான மிருகத்தனமான ஒடுக்குமுறையை எடுத்துக்காட்டுகிறது.

இனப்படுகொலை என்பது சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு கடுமையான குற்றமாகும். மேலும் விரிவான ஆவணங்களுக்குப் பிறகுதான் அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு இந்த வார்த்தையை அரிதான சந்தர்ப்பங்களில் ஏற்றுக்கொண்டது. வெகு மக்கள் கண்காணிப்பு, சித்ரவதை, தன்னிச்சையான தடுப்புக்காவல்கள் மற்றும் உய்குர்களுக்கு எதிராக சீனா பயன்படுத்திய கட்டாய தடுப்புக்காவல்கள் பற்றிய அறிக்கைகள் 'உய்குர் இனப்படுகொலை' என்ற தலைப்பில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கான இன்றைய பரப்புரையின் போது பேசிய பிடன், "சீனாவின் அடங்குமுறையின் கீழ் வாழும் உய்குர்களின் இன அழிப்பு என்பது நூற்றாண்டின் கறை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் காணாத அளவிலான மனித உரிமை மீறல்" என கண்டனம் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details