தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சக்திவாய்ந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை மேற்கொண்ட சீனா - அதிர்ச்சியில் அமெரிக்கா - General John Hyten

ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் பயணிக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை(hypersonic missile) ஒன்றை சீனா கடந்த ஜூலை மாதம் ஏவியதாக அமெரிக்க ராணுவ உயர் அலுலவர் தெரிவித்துள்ளார்.

ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை
ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை

By

Published : Nov 19, 2021, 7:58 PM IST

அமெரிக்க ராணுவத்தின் முக்கியப் பிரிவில் பணியாற்றும் ஜென்ரல் ஜான் ஹேட(General John Hyten), அந்நாட்டின் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

அதில் சீனா ராணுவம் குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, கடந்த ஜூலை மாதம் ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் பயணிக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை(hypersonic missile) ஒன்றை சீனா ஏவியுள்ளது.

உலகை சுற்றிவந்த அந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை உலகை சுற்றிவந்து சீனாவுக்கு திரும்பிவந்து குறி ஓரளவு சரியாகவும் வீழ்த்தியுள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் சுற்றிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவிய முதல் நாடாக சீனா உருவெடுத்துள்ளது.

அணு ஆயுத தாக்குதல்

நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை உருவாக்கிவரும் சீனா, அமெரிக்கா மீது எதிர்பாராத அணு ஆயுதத் தாக்குதல் நடத்தக்கூடும். கடந்த ஐந்தாண்டுகளில் சீனா நூற்றுக்கணக்கான ஹைப்பர்சோனிக் சோதனைகளை செய்துள்ள நிலையில், அமெரிக்கா ஒன்பது சோதனைகளை மட்டுமே இதுவரை மேற்கொண்டது. இந்த தொழில்நுட்பத்தில் சீனாவை விட அமெரிக்கா பின்தங்கியுள்ளது என்று எச்சரித்துள்ளார்.

அதேவேளை இந்த ஹைப்பர்சோனிக் சோதனை தகவலை சீனா மறுத்துள்ளது. தான் சாதாரண விண்கலச் சோதனைதான் மேற்கொண்டதாக சீனா விளக்கமளித்துள்ளது.

இதையும் படிங்க:சீனாவை வெறுப்பேற்ற லித்துவேனியாவுக்கு இடம்பெயர்ந்த தைவான்

ABOUT THE AUTHOR

...view details