உலகையே அச்சுறுத்திய கரோனா வைரஸ் மாற்றம் குறித்த விவரங்களை மறைத்த சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், அமெரிக்காவில் கரோனா வைரஸை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தவறிவிட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் , ஹாங்காங் சுயாட்சி சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்க நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதிக்கவுள்ள சீனா! - கரோனா வைரஸ்
பெய்ஜிங்: ஹாங்காங் சுயாட்சி சட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டதற்கு பதிலளிக்கும் விதமாக, சீனாவில் உள்ள அமெரிக்க பணியாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
![அமெரிக்க நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதிக்கவுள்ள சீனா! அமெரிக்க நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதிக்கவுள்ள சீனா!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:20:15:1594795815-8031815-372-8031815-1594793864903.jpg)
அமெரிக்க நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதிக்கவுள்ள சீனா!
அதிபர் ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தங்களது நாட்டின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது குறித்தும் சீனா எச்சரித்துள்ளது.