அமெரிக்காவில் வரும் நவம்பர் மூன்றாம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நான்காண்டு பதவிக்காலம் நிறைவடையவுள்ளதால் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. குடியரசுக் கட்சி சார்பில் இரண்டாம் முறையும் அதிபர் ட்ரம்ப் போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், வரப்போகும் தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் மக்களைக் குழப்பமடையச் செய்து தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரித்துள்ளது. அந்நாட்டின் உளவு அமைப்பான என்.சி.எஸ்.சி. (NCSC) தலைவர் வில்லியம் எவானியா இதைத் தெரிவித்துள்ளார்.