கோவிட்-19 தொற்றால் சீனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைச் சமீபத்தில் சீனா மறுமதிப்பீடு செய்தது. அதில் முன்னர் வெளியிட்ட தரவுகளைவிட 1,300 பேர் அதிகமாக உயிரிழந்துள்ளதாகச் சீனா அறிவித்தது.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், "வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா அல்ல, சீனா என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் சீனா மிக மிக அதிகம்.
சுகாதாரத் துறையில் வளர்ந்த நாடுகளாக இருக்கும் பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும்போது சீனாவில் மட்டும் இறப்பு விகிதம் 0.33ஆக இருக்கிறது. இது நம்பும்படி இல்லை. எனவே, சீனாவில் இறப்பு விகிதம் என்பது அவர்கள் வெளியிட்ட தரவுகளைவிட மிக அதிகமானதாகவே இருக்கும்.