சீனா-அமெரிக்கா இடையே கடந்த ஒரு வருடமாக வர்த்தகப் போர் நிலவிவருகிறது. இதனால், தொடர்ந்து இரு நாடுகள் எதிர்தரப்பினரின் பொருட்கள் மீது பரஸ்பரம் கூடுதல் வரிவிதித்து வருகின்றனர்.
இந்த மோதலை நிறுத்தும் வண்ணம் அடுத்த மாதம் இருநாட்டு பிரதிநிதிகளும் அமெரிக்காவில் கூடி பேசவுள்ளனர். இதில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்னாள் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹென்றி கிசிங்கரை சந்தித்துப் பேசிய சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ, "சீனா நம் எதிரி, அவர்களிடமிருந்து விலகவேண்டும் என்ற அமெரிக்கர்கள் சிலர் கருதுவது நல்லதுக்கில்லை.
கருத்து வேறுபாடுகளை மறந்து, மதிப்பு, நல்லிணக்கம் ஆகியவைகளின் அடிப்படையில் அமெரிக்காவோடு உறவை பலப்படுத்து முயற்சிக்கிறோம். இதற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு அளிக்கும் என நம்புகிறேன்" என்றார்.