தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஐ.நா.வுக்கு வழங்க வேண்டிய பணத்தை அமெரிக்கா செலுத்த வேண்டும் - சீனா

பெய்ஜிங்: ஐ.நா.வுக்கு வழங்க வேண்டிய தொகையை உடனடியாக அமெரிக்க செலுத்த வேண்டும் என சீனா அறிவுறுத்தியுள்ளது.

டோக்கியோ
டோக்கியோ

By

Published : May 16, 2020, 4:44 PM IST

உலக நாடுகளில் பேரிடரால் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டாலும் அங்கு சென்று உதவுவதற்கும், சர்வதேச அளவில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதனைத் தீர்த்துவைப்பதற்கும் முதல் ஆளாக நிற்பது ஐ.நா. சபைதான்.

இதற்காக ஐ.நா. சபை சிறப்பு அமைதி காக்கும் வரவு-செலவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்திற்காக பணத்தை பல நாடுகள் அனுப்பிவருகின்றன.

அந்த வகையில், இந்தத் திட்டத்திற்கான பணத்தில் 25 விழுக்காடு (சுமார் 3 பில்லியன் டாலர்) அமெரிக்காதான் வழங்கிவந்தது. ஆனால், சில மாதங்களாகப் பணம் வழங்காமல் அமெரிக்கா காலம் தாழ்த்தியுள்ளது.

ஐ.நா.விடம் நிதிச்சிக்கல் ஏற்படும் இடர் உள்ள காரணத்தால் அமெரிக்கா உடனடியாகத் தான் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து செலுத்துமாறு சீனா அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், சீனாவின் அறிக்கைக்கு அமெரிக்காவிடமிருந்து உடனடி பதில் எதுவும் வரவில்லை. ஐ.நா.வின் அமைதி காக்கும் வரவு-செலவுத் திட்டத்திற்கு 15 விழுக்காடு பணத்தை சீன அரசு வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கரோனாவிற்கான சிகிச்சைகள் தற்போது வரை அங்கீகரிக்கப்படவில்லை'

ABOUT THE AUTHOR

...view details