தலைநகர் ஒட்டாவாவில் வாகன நிறுத்துமிடம் ஒன்றில் 22-வயதான சீன மாணவர் மார்கம் லு வான்ஸென் தனது தோழியை சந்திக்க வந்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள், வான்ஸென்-ஐ துப்பாக்கி முனையில் மிரட்டி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.
கனடாவில் கடத்தப்பட்ட சீன மாணவரை மீட்கும் முயற்சி தீவிரம்!
ஒட்டாவா: கனடாவில் கடத்தப்பட்ட சீன மாணவரை தேடும் பணியை காவல்துறை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
கடத்தப்பட்ட சீன மாணவர்
சீன மாணவரை மீட்கும் முயற்சியில் டொராண்டோ உள்ள சீன தூதரகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை செய்தி தொடர்பாளர், "இந்த சம்பவம் வன்முறையின் உச்சகட்டமாகவே கருதப்படுகிறது. மாணவனின் பாதுகாப்பில் மிக கவனத்துடன் உள்ளோம்" என்றார்.
2017 ஆம் ஆண்டு மூன்று சீன மாணவர்கள் பணத்திற்காக கடத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.