தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

38 பேருடன் மாயமான சிலி ராணுவ விமானம்; தேடும் பணிகள் தீவிரம்!

சாண்டிகோ: தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் ராணுவ விமானம் ஒன்று 38 பேருடன் மாயமாகியுள்ளது.

chilean
chilean

By

Published : Dec 10, 2019, 12:29 PM IST

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள விமானப்படை தளத்திற்கு அந்நாட்டு விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது.

ஏசி-130 ஹெர்குலஸ் வகையைச் சேர்ந்த இந்த விமானமானது, அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 4.55 மணியளவில், 17 விமானக் குழுவினர், 21 பயணிகள் என 38 நபர்களுடன் புறப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாகவும், அதன்பின் விமானத்தை கண்டறிய இயலவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாயமான விமானத்தை தேடும் பணியில் சிலி நாட்டின் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிலி அதிபர் செபாஸ்டியன் பினேரா, விமானம் மாயமானது குறித்த தகவல் அறிந்ததும் தாம் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும், நிலமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விமானத்தை உயர் மின்னழுத்த கம்பிகளில் சொருகிய பைலட்... உயிர் தப்பிய அதிசயம்!

ABOUT THE AUTHOR

...view details